'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...' - கவினால் வெட்கப்படும் லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 03:50 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவும் கஸ்தூரியும் உள்ளே நுழைந்ததற்கு பிறகு பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக அந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கும்

பத்தாதற்கு மது தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டதாக வெளியே அனுப்பப்பட்டவுடன் சமூக வலைதளங்களில் அது தான் விவாதப் பொருளாகி வருகிறது. எப்பொழுதும் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டு காமெடி செய்யும் சாண்டி மாஸ்டர் கூட அடிக்கடி சீரயஸாகி விடுகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் கவினும் லாஸ்லியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கவின் ஏதோ சொல்ல வெட்கப்பட்டு முகத்தை லாஸ்லியா மூடுகிறார். பின்னணியில் ஆடுகளம் படத்தில் இருந்து அய்யய்யோ பாடல் ஒலிக்கிறது.
'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...' - கவினால் வெட்கப்படும் லாஸ்லியா வீடியோ
Tags : Kamal Haasan, Bigg Boss 3, Kavin, Losliya