பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து முந்தைய சீசனின் போட்டியாளரும், டைட்டில் வின்னருமான நடிகை ரித்விகா நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு முதல் வாரத்திலேயே எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நடிகை ரித்விகா, 100 நாட்கள் வெற்ரிகரமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டிலையும் தட்டிச் சென்றார். தற்போது திரை வாழ்வில் பிசியாக இருக்கும் ரித்விகா Behindwoods-ன் Second Show வித் நிக்கி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிக் பாஸ் 3 குறித்து சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அவர் கூறுகையில், ‘பிக் பாஸ் சீசன் 3 இப்போ தான் ஆரம்பமாகியிருக்கு இன்னும் கேம் ஆரம்பமாகல. புரொமோ வீடியோவில் வரும் எதுவும் எபிசோடில் இருக்காது. அதுவும் ஒரு மணிநேர எபிசோடை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. உள்ளே இருந்து பார்த்தால் தான் தெரியும். பிக் பாஸ் 3 பார்க்க ரொம்பவும் ஆர்வமா இருக்கு என கூறினார்.
பிக் பாஸ் சீசன் 2-ல் இருந்த கொடூரமான ‘ஹிட்லர்’ டாஸ்க் மட்டும் இந்த சீசனில் வேண்டாம், அதை வைக்கவும் மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார். தற்போதைய பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கன்ஃபெஷன் ரூம் ரொம்ப வித்தியாசமாக இருப்பதாக கூறிய ரித்விகா, பிக் பாஸ் வாய்ஸ், வீடு, லிவ்விங் ஏரியா போன்றவற்றை மிஸ் பண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார்.
'இனிமே தான் ஆட்டமே இருக்கு..'- பிக் பாஸ் 3 குறித்து டைட்டில் வின்னர் வீடியோ