‘ப்பா.. இன்னாமா நடிக்கிறான்..? இது லிஸ்ட்லயே இல்லையேம்மா...!’- கவினின் Dream Girl இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 3 todays Promo is out, Kavin and Sakshi romancing each other

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சாக்ஷிக்கு அபிராமியும், முகெனும் பொட்டு வைத்து அழகு பார்க்கிறார்கள். இதை கவின் விமர்சனம் செய்ய, பின் கவின் - சாக்ஷியின் உரையாடல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சாக்ஷியின் ட்ரீம் பாய்-க்கான அம்சங்கள் கவினிடம் இருப்பதாகவும், நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண் எப்படி இருக்கணும் என்ற லிஸ்ட்டில் ஏர்கான்வே நீ இருக்கறது தெரியலயா தத்தி என சாக்ஷி குட்டு வாங்குகிறார். இது அபிராமியை வெறுப்பேத்தும் டிராமாவா அல்ல, சாக்ஷி மீது கவினுக்கு காதல் வந்திவிட்டதா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.