''ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு...'' - கமல்ஹாசன் நக்கல் பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்திருக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.

Kamal Haasan speaks about Vikram and Kadaram Kondan

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய கமல், ''எனக்கு இந்த படத்தின் மீது எந்த பதட்டமும் இல்லை. இந்த படம் துவங்கும் போது ஒரு நாளும், இடையில் ஒரு நாளும் வந்திருப்பேன். பாக்கி எனக்கு இந்த படத்தின் மீது எந்த பதட்டமும் இல்லை.

அதற்கு காரணம், இயக்குநர் ராஜேஷ். என்ன பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமையை நான் வளர்த்து விட்டேன் என்று சொல்வதை விட, அவ்வளவு பிரச்சனைகளை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்திருக்கேன் என் படத்துல. ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு நாங்க சினிமா எடுத்திருக்கோம்'' என்றார். 

''ஒரு பெரிய அரசாங்கமே துரத்துர அளவுக்கு...'' - கமல்ஹாசன் நக்கல் பேச்சு வீடியோ