சூர்யாவுக்கு கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்.. விலை எம்புட்டு தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிகர் சூர்யாவிற்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

Also Read | சாய் பல்லவி நடிக்கும் புதிய தமிழ்ப்படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு TVS அப்பாச்சி மோட்டார் பைக்குகளையும் பரிசளித்துள்ளார்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

இந்நிலையில்  நடிகரும் தயாரிப்பாளருமான கமல், விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை அவரது வீட்டிற்கே சென்று பரிசாக வழங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகர் சூர்யா டிவிட்டரில் பகிர, இப்போது அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.  சூர்யா & கமலுடன் லோகேஷ் கனகராஜ், ராஜ சேகர பாண்டியன், சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

இந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம்,  Day Date 40 mm Ever Rose மாடல் கோல்டு வாட்ச் ஆகும். Sun Dust Dial உடன் Baguette வைரம் பதித்த 18 கேரட் ரோஸ் கோல்டு வாட்ச் இது. இதன் கோயம்புத்தூர் ரோலக்ஸ் ஷோ ரூமின் மதிப்பு 30,96,000 ரூபாய் ஆகும்.

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20.. FIRST LOOK போஸ்டர் & TITLE எப்போ? தமன் கொடுத்த சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Gifted Rolex daydate 40 mm ever rose gold Watch to Suriya

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Gifted Rolex watch to Suriya, Suriya, Vikram Movie will find this news story useful.