''எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது'' - பிறந்தநாள் நிகழ்வு குறித்து கமல் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் தனது 5 வயதில் 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் திரையுலகில் அறிமுகமானார். இந்த வருடத்துடன் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

Actor Kamal Haasan Request to fans about His Birthday

வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் வருகிற நவம்பர் 7, 8, 9, ஆகிய தினங்களில் ஒரு தொடர் கொண்டாட்ட நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த தினம் தான், அவரது தந்தையின் நினைவு தினமாகும்.

அதன் காரணமாக அவரது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தையின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி தனது திரையுலக குருவான பாலச்சந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

பின்னர் நவம்பர் 9 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசைவிழை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ''எனது பிறந்தநாள் அன்று பரமக்குடியில் எனது தந்தையார் D.சினிவாசனின் சிலையை திறக்கவுள்ளோம்.  அப்போது நண்பர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகரபெருமக்கள்  எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் பேனர்கள், ஃபிளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்விசயத்தில் எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்ட மாட்டாது என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.