www.garudabazaar.com
iTechUS

எமோஷன் ஆன GP முத்து.. டக்குன்னு கமல் கேட்ட கேள்வி.. விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kamal Asks GP Muthu about incidents of azeem and Vikraman

Also Read | "இப்டி உங்கள அனுப்ப மனசில்ல".. ADK -வுக்கு கமல் கொடுத்த Gift... மனம் உருகிய பார்வையாளர்கள்!!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

Kamal Asks GP Muthu about incidents of azeem and Vikraman

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

Kamal Asks GP Muthu about incidents of azeem and Vikraman

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இதனிடையே, போட்டியாளர்களிடம் பேசிய கமல்," அந்த சம்பவம் நடக்கும்போது நான் உள்ள இருந்திருக்கணும். அப்படினு தோன்றியது உண்டா? அல்லது நல்ல வேளை இதெல்லாம் நடக்கும்போது நான் உள்ள இல்ல-ன்னு தோணுச்சா? அதை பத்தி சொல்லுங்க" என கேட்கிறார்.

Kamal Asks GP Muthu about incidents of azeem and Vikraman

அப்போது பேசிய GP முத்து,"சில விஷயங்கள் நடக்கும்போது நான் உள்ள இருந்திருக்கணும். அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கிறாங்கல்ல அப்போ தனிப்பட்ட விஷயத்துல நீங்க ஏன் போய் பேசுறீங்க-ன்னு கேட்ருப்பேன்" எனச் சொல்ல "நீங்க யாரையோ மனசுல வச்சுக்கிட்டு பேசுறீங்க. அவங்க யாருனு எங்களுக்கு தெரியவேண்டாமா?" என கமல் கேட்கிறார்.

அப்போது, அவங்களை தான் வெறுக்கவில்லை என முத்து சொல்ல, பெயரை குறிப்பிடும்படி கமல் வலியுறுத்துகிறார். அப்போது, "சில நேரத்துல விக்ரமன் வருவாங்க, சில நேரத்துல அசீம் வருவாங்க" என சொல்லிவிட்டு முத்து அமர்கிறார். அப்போது, "என்ன உக்காத்துட்டீங்க? அந்த சம்பவம் என்னன்னு சொல்லுங்க?" என கமல் கேட்க, முத்து யோசித்தபடி தனக்கு நினைவில் இல்லை என்கிறார். GP முத்து - கமல் இடையே நடந்த இந்த சுவாரஸ்ய வேடிக்கையான கேள்வி பதில்களால் போட்டியாளர்கள் மட்டும் அன்றி பார்வையாளர்களும் குலுங்கி சிரித்தனர்.

Also Read | “ஹவுஸ்மேட்ஸ் சொன்ன விமர்சனங்கள் எப்படி இருக்கு?”- பதில் சொன்ன விக்ரமனை பாராட்டிய கமல்.. Bigg Boss 6

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Asks GP Muthu about incidents of azeem and Vikraman

People looking for online information on Amudhavanan, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, Kamal Haasan, Vikraman will find this news story useful.