www.garudabazaar.com
iTechUS

"இப்டி உங்கள அனுப்ப மனசில்ல".. ADK -வுக்கு கமல் கொடுத்த Gift... மனம் உருகிய பார்வையாளர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

Also Read | அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா.. புதிய தோற்றத்தில் தனது PHOTO-வை வெளியிட்டு பதிவு!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்படுகிறது.

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கமலஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி இருந்தார். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். போட்டியாளர்களிடையே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான அசத்தல் பதில்களையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன்.

இதனைத் தொடர்ந்து, அசிம், கதிரவன், ஷிவின் உள்ளிட்டோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேற மைனா நந்தினி, ADK மற்றும் கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறும் நிலை இருந்தது. அப்படி இருக்கையில், ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ADK, இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது, அவரது ரசிகர்களை சற்று வேதனை அடைய வைத்திருந்தது.

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

இந்த நிலையில், வெளியே வந்த ADKவிற்கு கமல்ஹாசன் கொடுத்த கிஃப்ட் தொடர்பான விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ADK, வெளியே வந்த பின்னர், கமல்ஹாசன் முன்னிலையில் RAP பாடல் ஒன்றை பாடி இருந்தார். அந்த சமயத்தில், KH என்ற எழுத்து இருக்கும் தொப்பி ஒன்றையும் ADK விற்கு அளித்திருந்தார் கமல்ஹாசன்.

Sacrifice டாஸ்க்கில் ஏடிகே முடி முன்பு கொஞ்சம் மீதம் வைத்து மற்றவை வெட்டப்பட்டிருந்த நிலையில், அந்த தலையுடன் அவரை வெளியே அனுப்ப மனமில்லை என்றும் கூறி தனது தொப்பியை கமல்ஹாசன் அளித்திருந்தார்.

Also Read | “ஹவுஸ்மேட்ஸ் சொன்ன விமர்சனங்கள் எப்படி இருக்கு?”- பதில் சொன்ன விக்ரமனை பாராட்டிய கமல்.. Bigg Boss 6

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan gift to ADK after his eviction bigg boss

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Kamal Haasan gift to ADK will find this news story useful.