www.garudabazaar.com
iTechUS

Varisu : "ரஞ்சிதமே ரிலீஸ் ப்ளான்லயே இல்ல..".. "விஜய் Step க்கு ஆறரை நிமிஷம் உறைஞ்சுட்டோம்" -தமன் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

Ranjithame release back story Says Thaman fans meet Exclusive

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தமிழில் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வர, தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்காக ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக பேட்டி கொடுத்த இசையமைப்பாளர் தமன், “வாரிசு படத்தில் முதலில் நாங்கள் தீ தளபதி பாடலை வெளியிடவே முடிவு எடுத்திருந்தோம். அதாவது அனைவரும் அந்த முடிவை தான் எடுத்திருந்தார்கள். ஆனால் நான் முதலில் ரஞ்சிதமே பாடலை வெளியிடலாம் என்று கூறினேன். யூட்யூப் எல்லாம் செக் பண்ணி பார்த்தபோது காலியாக இருந்தது. ஆகையால் ரஞ்சிதமே பாடலை இறக்கி விடலாம் என்று கூறினேன். அப்போது விஜய் அண்ணா நீ உறுதியாக தான் சொல்கிறாயா என்று கேட்டார். நானும் உறுதியாகவே இருந்தேன். அதற்கேற்றாற்போல் அந்த நேரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது.

அவற்றை லிரிக் வீடியோவில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருந்தது. விஜய் அண்ணாவும் வேற லெவல் ஸ்டெப் போட்டார். அதை லிரிக்ஸ் வீடியோவில் இணைக்க முடிந்தது. அந்த பாடலின் கடைசி ஒரு நிமிடத்தில், அவர் இந்த பாடலில் எங்களின் உழைப்பை, வலியை உணர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டு ஒரே ஷாட்டில் ஆடினார். அவர் ஆடி முடித்ததும் நாங்கள் அனைவரும் ஆறரை நிமிடங்கள் கைதட்டிக் கொண்டே இருந்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

VARISU : "ரஞ்சிதமே ரிலீஸ் ப்ளான்லயே இல்ல..".. "விஜய் STEP க்கு ஆறரை நிமிஷம் உறைஞ்சுட்டோம்" -தமன் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ranjithame release back story Says Thaman fans meet Exclusive

People looking for online information on Ranjithame, S Thaman, Sri Venkateshwara Creations, Varisu, Varisu first single, Vijay will find this news story useful.