www.garudabazaar.com
iTechUS

“ஹவுஸ்மேட்ஸ் சொன்ன விமர்சனங்கள் எப்படி இருக்கு?”- பதில் சொன்ன விக்ரமனை பாராட்டிய கமல்.. Bigg Boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Vikraman talks about others opinion kamal haasan praises

Also Read | Keerthy Suresh : நம்ம ‘ரிவால்வர் ரீட்டா’ கீர்த்தி சுரேஷ் களைகட்டிய பொங்கல் Celebration.. வைரல் ஃபோட்டோஸ்

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

Vikraman talks about others opinion kamal haasan praises

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

Vikraman talks about others opinion kamal haasan praises

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Vikraman talks about others opinion kamal haasan praises

இதனிடையே, விக்ரமனிடம் பேசிய கமல்," இங்க ஒவ்வொருத்தரும் போட்டியாளர்கள் பற்றி கருத்து சொல்லிருந்தாங்க. அதை பத்தி உங்க கருத்து என்ன?" எனக் கேட்டார். அப்போது அவருக்கு பதில் அளித்த விக்ரமன்,"கலவையான விமர்சனமாக இருந்தது. அதுதான் எதார்த்தமும் கூட. ஒருத்தருக்கு சிலரை பிடிக்கும். சிலரை பிடிக்காது. சில குணங்கள் பிடிக்கும். சில குணங்கள் பிடிக்காது. அதன் அடிப்படையில் ஒருத்தரு ஒரு கருத்தை சொன்னாரு. அதையே மறுத்து இன்னொருத்தர் சொன்னாரு. வெளியே இப்படித்தான் இருக்கும். ஒரு ஷாக் அப்சார்பர் மாதிரி நான் அதை பார்க்குறேன். இருட்டுல இருந்துட்டு திடீர்னு வெளிச்சத்தை பார்க்கும்போது, கண் கூசும். தலைவலி கூட வரும். இப்படியும் விஷயங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க அப்படின்னு சொல்ற மாதிரி தான் அதை பார்க்குறேன்" என்றார். இதனை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த கமல், நன்றி, சரியா சொன்னீங்க' என்றார்.

Also Read | எலிமினேட் ஆனதும் போட்டியாளர் செய்த காரியம்! "Well Played!" - பிக்பாஸ் சொன்ன உற்சாக வார்த்தைகள்.. bigg boss 6 tamil

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman talks about others opinion kamal haasan praises

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Vikraman will find this news story useful.