www.garudabazaar.com

THUNIVU: 'துணிவு' படத்தின் ப்ரோமோ பாடல்.. களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்! தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் ப்ரோமோ பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Kalayan Master to shoot a promo song for Thunivu in a few days sources

Also Read | கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனை வாழ்த்திய ஐஸ்வர்யா! என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Kalayan Master to shoot a promo song for Thunivu in a few days sources

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

Kalayan Master to shoot a promo song for Thunivu in a few days sources

ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோ பாடல் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ப்ரோமோ பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்து படமாக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், வல்லவன், மஞ்சு வாரியர், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'Love Today' ரிலீஸ்.. உருக்கமான அறிக்கை வெளியிட்டு இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி..!

தொடர்புடைய இணைப்புகள்

Kalayan Master to shoot a promo song for Thunivu in a few days sources

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Thunivu, Kalayan Master, Thunivu, Thunivu Movie shoot updates will find this news story useful.