www.garudabazaar.com

அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்திலிருந்து BIGGBOSS அமீர் வெளியிட்ட வைரல் SCREEN SHOT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Bigg Boss Amir Shared Screen shot of Ajith Kumar Thunivu Movie

Also Read | 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு.. அஜித்தை சந்தித்த பிரபல தயாரிப்பாளர்! வைரல் ஃபோட்டோ!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Bigg Boss Amir Shared Screen shot of Ajith Kumar Thunivu Movie

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Bigg Boss Amir Shared Screen shot of Ajith Kumar Thunivu Movie

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், வல்லவன், மஞ்சு வாரியர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.  ‌இந்நிலையில் நடிகர் பிக்பாஸ் அமீர், தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தான் டப்பிங் பேசும் காட்சியின் புகைப்படத்தையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு மற்றும் வெண்ணிற டி- சர்ட் அணிந்து அமீர் காட்சியளிக்கிறார். அமீர் பகிர்ந்துள்ள டப்பிங் புகைப்படத்தில் 19-10-2022 என்ற தேதி  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

Also Read | நடிகர் அஜித்தை ஆசிர்வதித்த வயதான பெண்மணி.. பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Amir Shared Screen shot of Ajith Kumar Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Thunivu Movie updates, Amir, Bigg boss amir, Thunivu will find this news story useful.