www.garudabazaar.com

'துணிவு' படத்தின் படப்பிடிப்பு.. அஜித்தை சந்தித்த பிரபல தயாரிப்பாளர்! வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகி உள்ளது.

Boney Kapoor on the sets of Thunivu with Ajith Kumar

Also Read | Rambha Car Accident: "கெட்ட நேரம்.. பிரார்த்தனை பண்ணுங்க".. விபத்துக்குள்ளான நடிகை ரம்பா சென்ற கார்..!

வலிமை படத்துக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Boney Kapoor on the sets of Thunivu with Ajith Kumar

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Boney Kapoor on the sets of Thunivu with Ajith Kumar

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Boney Kapoor on the sets of Thunivu with Ajith Kumar

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. காதில் கடுக்கனுடன் முகத்தில் காயங்கள் போன்ற மேக்கப் போட்டு நடிகர் அஜித் கசங்கிய சட்டை அணிந்து புகைப்படத்தில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | நடிகர் அஜித்தை ஆசிர்வதித்த வயதான பெண்மணி.. பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor on the sets of Thunivu with Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Thunivu will find this news story useful.