www.garudabazaar.com

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனை வாழ்த்திய ஐஸ்வர்யா! என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

Aishwarya Rajinikanth wishes to Gautham Karthik And Manjima Mohan

Also Read | 'Love Today' ரிலீஸ்.. உருக்கமான அறிக்கை வெளியிட்டு இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி..!

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Aishwarya Rajinikanth wishes to Gautham Karthik And Manjima Mohan

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

‌‍ மேலும் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து எடுத்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajinikanth wishes to Gautham Karthik And Manjima Mohan

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் பதிவில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை கமெண்ட் செய்து தெரிவித்து உள்ளார். "எனக்கு பிடித்த இருவர் ஒன்றாக" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். பதிலுக்கு தங்கள் நன்றியை கௌதம் கார்த்திக், இதய எமோஜி வடிவிலும், மஞ்சிமா மோகன், "மேடம் லவ் யூ" என கமெண்ட் செய்துள்ளார்.

Aishwarya Rajinikanth wishes to Gautham Karthik And Manjima Mohan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'வை ராஜா வை' படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bigg boss : "மல்லிப்பூ" பாட்டுக்கு டான்ஸ் ஆடிய குயின்ஸி .. மாஸ் காட்டிய ஜனனி.. 😍

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth wishes to Gautham Karthik And Manjima Mohan

People looking for online information on Aishwarya Rajinikanth, Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.