www.garudabazaar.com

"என் பையன் Pass ஆயிட்டான், அதுவும்.." உச்சகட்ட மகிழ்ச்சியில் கலா 'மாஸ்டர்' போட்ட ட்வீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள நடன இயக்குனர் கலா மாஸ்டர்.

kala master tweets about her son scores a grade in icse syllabus

Also Read | பிரபல முன்னணி நடிகையுடன் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? ஆஹா

மேலும், ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், நடுவராக கலா மாஸ்டர் கலந்து கொண்டிருந்தது, மக்கள் மத்தியில் அவரை வேற லெவலில் பிரபலம் அடைய செய்தருந்தது.

அதே போல, கலா மாஸ்டரின் சகோதரிகளான பிருந்தா மற்றும் கிரிஜா ஆகியோரும், பிரபலமான நடன இயக்குனர்கள் தான்.

அதே போல, கடந்த ஏப்ரல் மாதம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்திலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், கலா மாஸ்டர் நடித்து அசத்தி இருந்தார்.

kala master tweets about her son scores a grade in icse syllabus

தேர்ச்சி பெற்ற கலா மாஸ்டர் மகன்

இந்நிலையில், நடன இயக்குனர் கலா மாஸ்டர், தனது ட்விட்டர் பக்கத்தில், மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ICSE தேர்வில் மகன் தேர்ச்சி பெற்றதை பெரும் ஆனந்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "எனது மகன் ICSE தேர்வில், A கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளான் என்பதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என உச்சகட்ட மகிழ்ச்சியில் கலா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்தும் நெட்டிசன்கள்

இது தொடர்பான பதிவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், கலா மாஸ்டரின் மகனுக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, கலா மாஸ்டரின் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்த வசனமான, "சும்மா கிழி கிழி கிழி" என்றும் சிலர் ஜாலியாக குறிப்பிட்டு, வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

 

Also Read | குடும்பத்துடன் உலகத்தை சுற்றி வரும் பூஜா ஹெக்டே.. ஐரோப்பாவில் இருந்து வெளியிட்ட டூர் PHOTOS!

 

தொடர்புடைய இணைப்புகள்

kala master tweets about her son scores a grade in icse syllabus

People looking for online information on Kala Master, Kala Master Son, Kala Master son scores, Kala master tweets will find this news story useful.