www.garudabazaar.com

அடேங்கப்பா.. 'RRR' படத்துல அந்த சீன்.. மிரண்டு போய் பாராட்டிய மார்வெல் இயக்குனர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படத்தை ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பாராட்டி உள்ளனர்.

director James Gunn and director Scott Derrickson praise Jr NTR Rajamouli Ram Charan RRR

Also Read | நடிகர் கயல் சந்திரன் தந்தை மரணம்.. தேம்பி தேம்பி கதறி அழுத VJ அஞ்சனா.. உருக்கமான வீடியோ!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

director James Gunn and director Scott Derrickson praise Jr NTR Rajamouli Ram Charan RRR

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்த திரையரங்க வசூலாக ஈட்டியுள்ளது. இந்த RRR படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி ஒடிடி உரிமையை ஜி5 கைப்பற்றியுள்ளது. ஹிந்தி மொழி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. அதேபோல் ஆங்கிலம், போர்த்துகீசிய, துருக்கிய, ஸ்பானிய, கொரிய மொழிகளின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

director James Gunn and director Scott Derrickson praise Jr NTR Rajamouli Ram Charan RRR

ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் இயக்குனர் ஜேம்ஸ் கன் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இயக்குனர் ஸ்காட் டெரிக்சன் ஆகியோர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ஆர்ஆர்ஆர் படத்தைப் புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

director James Gunn and director Scott Derrickson praise Jr NTR Rajamouli Ram Charan RRR

“நேற்றிரவு எனது பிறந்தநாளைக் கொண்டாட, நானும் என் மனைவியும் குழந்தைகளும் @RRRMovie ஐப் பார்த்தோம் - இது என்ன ஒரு அற்புதமான மூர்க்கத்தனமான ரோலர் கோஸ்டர். அதை நேசித்தேன்." என இயக்குனர் ஸ்காட் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | குடும்பத்துடன் உலகத்தை சுற்றி வரும் பூஜா ஹெக்டே.. ஐரோப்பாவில் இருந்து வெளியிட்ட டூர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

director James Gunn and director Scott Derrickson praise Jr NTR Rajamouli Ram Charan RRR

People looking for online information on Alia Bhatt, Director James Gunn, Director Scott Derrickson, Jr ntr, Ramcharan, RRR Movie, SS Rajamouli will find this news story useful.