www.garudabazaar.com

இரட்டை வேடத்தில் காஜல் அகர்வாலின் "காமெடி பேய் படம்... "இப்படி ஒரு கான்செப்ட்டா..".. செம டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீட் பிக்சர்ஸ் (Seed pictures) வழங்கும் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

Also Read | பிரான்ஸ் அரசின் உயரிய விருது பெறும் பிரபல இந்திய இசைக் கலைஞர் அருணா சாய்ராம்.!

கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்பட டீசர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

காஜல் அகர்வாலின்  நடிப்பில் ‘கோஸ்டி’ திரைப்படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்த வகையில் அமையும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

‘குலேபாகவலி’, ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்க, ஜாக்கப் ரத்தினராஜ், ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். சாம். சி.எஸ் இப்படத்துக்கு இசையமைக்க, கலை இயக்குநராக கோபி பணிபுகிறார். பில்லா ஜெகன் இப்படத்துக்கு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். VFX மேற்பார்வையை V. தினேஷ் குமார் கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

 

Also Read | ஹே சினாமிகாவை தொடர்ந்து பிருந்தா மாஸ்டரின் ஆக்‌ஷன் படமான தக்ஸ்.. ஆடியோ குறித்த செம அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal starrer Ghosty comedy investigation thriller teaser

People looking for online information on Kajal Aggarwal Ghosty, Kalyan, Sam CS, Yogi Babu will find this news story useful.