www.garudabazaar.com

Harish Kalyan: தாலி கட்டியதும் திருமணத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த CUTE செயல் 😍 VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண்,  திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Harish Kalyan Narmada Udayakumar Wedding Function Video

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Harish Kalyan Narmada Udayakumar Wedding Function Video

சிலநாட்களுக்கு முன் தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்து ஹரிஷ் கல்யாண் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார்.   அதில் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் இன்று காலை 9  - 10.30 மணியளவில் நர்மதா உதயக்குமாரை திருமணம் செய்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு நடந்த சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. மேலும் திருமண புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் திருமணத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மணமகளுக்கு தாலி கட்டும் வீடியோ & தாலி கட்டிய பின்னர் மாலை மாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் மணமகன் ஹரிஷ் கல்யாண் தாலி கட்டிய பின்னர் மணமகள் நர்மதா உதயக்குமாரின் கண்ணத்தை கொஞ்சும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.

Harish Kalyan Narmada Udayakumar Wedding Function Video

தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

Harish Kalyan Narmada Udayakumar Wedding Function Video

மேலும் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Narmada Udayakumar Wedding Function Video

People looking for online information on Harish Kalyan, Harish Kalyan Wedding, Narmada will find this news story useful.