www.garudabazaar.com

மறைந்த நா. முத்துக்குமார் வரிகளால் உருவான 'அநீதி' படத்தின் முதல் சிங்கிள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நா. முத்துக்குமார் வரிகளில் 'அநீதி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Aneethi Movie First Single Released with Na Muthukumar Lyrics

Also Read | இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.. அவரே வெளியிட்ட வேறவெவல் BTS PHOTOS!

தேசிய விருது பெற்ற இயக்குனர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில்  நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்த  துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

Aneethi Movie First Single Released with Na Muthukumar Lyrics

இயக்குனர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட  G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின்  நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து "திகட்ட திகட்ட காதலிப்போம்" என்ற பாடலுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஜிவி பிரகாஷ் & யாமினி காந்தசாலா பாடியுள்ள இப்பாடல் இனிமையான காதல் பாடலாக வெளி வந்துள்ளது. 

Aneethi Movie First Single Released with Na Muthukumar Lyrics

இந்த படத்தில் வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன்,இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும்  நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

Also Read | Halloween Day: தனது மகனுடன் பிரபல ஹாலோவீன் மேக்கப்.. நடிகை கனிகா வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Aneethi Movie First Single Released with Na Muthukumar Lyrics

People looking for online information on Aneethi Movie, Aneethi Movie First Single, Arjun Das, Na Muthukumar Lyrics will find this news story useful.