Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்..!! பொண்ணு இவங்கதான்.! ஃபோட்டோவுடன் வெளியான அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

Also Read | 'PS1' படத்திற்காக முழு IMAX தியேட்டரையும் புக் செய்த கமல்? கூட இவங்க வேறயா? செம்ம

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஹரிஷ் கல்யாண் டீஸல் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

மேலும் சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

இந்நிலையில் தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்து ஹரிஷ் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகின்றேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அன்புடன், ஹரிஷ் கல்யாண்" என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Also Read | விஷால் நடிக்கும் "மார்க் ஆண்டனி".. வித்தியாசமான கேங்ஸ்டர் லுக்கில் S.J. சூர்யா! செம்ம போஸ்டர்

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Statement about His Marriage with Narmada Udayakumar

People looking for online information on Harish Kalyan, Harish Kalyan about His Marriage will find this news story useful.