ஹே சினாமிகாவை தொடர்ந்து பிருந்தா மாஸ்டரின் ஆக்ஷன் படமான தக்ஸ்.. ஆடியோ குறித்த செம அப்டேட்..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
Also Read | "சாப்பாடே இறங்கல... அசல்க்கும் எனக்குமான ஃப்ரண்ஷிப் உங்களுக்கு புரியலடா.." நிவாஷினி
சமீபத்தில் 'RRR', 'விக்ரம்', 'டான்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, 'மும்பைகார்' என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு, HR Pictures பேனரின் கீழ் இந்த ஆக்சன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். 'புலி', 'இருமுகன்', 'ஏபிசிடி', 'சாமி ஸ்கொயர்' போன்ற பெரிய திரைப்படங்களையும், சுமார் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களையும் விநியோகித்த சிபு தமீன்ஸின் மகள் தான் தயாரிப்பாளர் ரியா சிபு.
'தக்ஸ்' திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ் காந்த், சரத் அப்பானி, அனஸ்வர ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய இளம் நடிகரான ஹிருது ஹாரூன் முதன்மை பாத்திரத்தில் இப்படம் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான 'க்ராஷ் கோர்ஸ்' என்ற அமேசான் நிகழ்ச்சியில் ஹிருது ஹாரூனின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது விக்ரம் மாஸி, விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படமான 'மும்பைகார்' படத்தில், முதன்மை கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வட இந்திய மற்றும் தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இசை மற்றும் பட விளம்பரங்களை முன்னெடுக்க, சோனி மியூசிக் நிறுவனத்துடன் 'தக்ஸ்' திரைப்படம் தற்போது இணைந்துள்ளது. ஆம், 'தக்ஸ்' திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் 'தக்ஸ்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் சாம் CS-ன் அபாரமான இசையுடன் வெளியான கதாபாத்திர க்ளிம்ப்ஸ் வீடியோ, இப்படம் குறித்தான ஆவலை அதிகரித்துள்ளது.
RRR படத்தின் ப்ரோமோ எடிட்டிங் மூலம் பிரபலமான எடிட்டர் பிரவீன் ஆண்டனி, இந்த ஆக்ஷன் படத்தை எடிட் செய்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரியேஷ் குருசுவாமி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பியோனிக்ஸ் பிரபு மற்றும் ராஜசேகர் சண்டைப் பயிற்சியை அளிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் டிசம்பர் 2022-ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் - சிவா (Aim)
Also Read | பிரான்ஸ் அரசின் உயரிய விருது பெறும் பிரபல இந்திய இசைக் கலைஞர் அருணா சாய்ராம்.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vettaiyaadu Vilaiyaadu Song Action Directed By Brinda
- Writer Brinda Sarathi Debute Acting The Warriorr And Vanangaan
- Brinda Master To Direct Pan India Film THUGS Starring Hridhu Haroon
- New Update About Brinda Next Directorial After Hey Sinamika
- New Update About Brinda Next Directorial After Hey Sinamika
- Actress Trisha With Dogs During The Shooting Of Brinda
- Awesome News From Hey Sinamika Team - Dulquer Salmaan, Aditi Rao Hydari, Kajal Aggarwal, Brinda Gopal
- Brinda And Nephew Prasanna Strike It Big At Kerala State Awards
- Aamir Khan Apologizes For Thugs Of Hindostan Failure
- Vashmalle Full Song From Thugs Of Hindostan
- Making Of Thugs Of Hindostan
- Aamir Khan's Thugs Of Hindostan Jukebox
தொடர்புடைய இணைப்புகள்
- Vijay Sir தான் இந்த விஷயத்துக்கு முக்கியமான காரணம் -Maanada Mayilada Bala Interview
- Maanada Mayilada On Stage | Kala & Brinda Master's Dance Moments!
- Thaanaa Serndha Koottam | Vettri Theatre's top 10 films of 2018 - Slideshow
- Thaanaa Serndha Koottam | Best performing films of 2018 at Vettri Theatres - Slideshow
- Thaanaa Serndha Koottam | List of films remade in Tamil cinema in the last 5 years - Slideshow
- Thaanaa Serndha Koottam | Deleted scenes from popular Tamil films - Slideshow
- Thaanaa Serndha Koottam | Kollywood supports the return of CSK and Dhoni! - Slideshow
- Thaanaa Serndha Koottam - Photos
- Thaanaa Serndha Koottam - Videos
- - Videos