www.garudabazaar.com

"ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது குழந்தையின் இதுவரை காணாத புதிய போட்டோக்களை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

Also Read | நயன்தாரா நடிக்கும் 'CONNECT'.. தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்  

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

குழந்தை பிறந்து எட்டு மாதம் கடந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையின் இதுவரை காணாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்தது முதல் இன்றுவரை குழந்தையின் வளர்ச்சியை புகைப்படங்களாக எடுத்து வீடியோ வடிவில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். "எனது மகன் மிகவும் வேகமாக வளர்ந்து விட்டான்" என காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. வெளியான உருக்கமான 3-வது சிங்கிள் Glimpse வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Collage Video

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal with her son will find this news story useful.