www.garudabazaar.com

முதல் முறையாக குழந்தையின் முகத்தை Reveal செய்த காஜல் அகர்வால்! வைரல் ஃபோட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது குழந்தையின் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Viral Full Face Photo

Also Read | உலகின் மிகப்பழமையான நாட்டில் ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தான் போயிருக்காங்களா? செம தகவல்

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Viral Full Face Photo

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த 6 மாதங்கள் எவ்வளவு வேகமாக சென்றன. என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை.

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Viral Full Face Photo

நான் பயந்துபோன ஒரு இளம் பெண்ணாக எப்படி குழந்தையை கவனித்துக் கொள்ளப் போகிறேன் என்று யோசித்திருக்கிறேன். இப்போது அம்மாவின் கடமைகளை நிறைவேற்றுவது &  அதில் நான் ஒவ்வொரு முறையும் கற்றுக்கொள்வது வரை செனறிருக்கிறேன்.

நிச்சயமாக, முழு நேர வேலையைச் செய்து கொண்டே  உன்னை கவனிப்பதில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை.  

ஒரே இரவில் உங்களுக்கு முதல் ஜலதோஷம், தலையில் முதன்முறையாக ஏற்பட்ட வீக்கம், குளத்தில், கடலில் நீச்சல் அடித்தது,  உணவுகளை சுவைக்க ஆரம்பித்தது எல்லாம் நல்ல தருணங்கள்.

உன் அப்பாவும் நானும் அடுத்த வாரம் கல்லூரிக்கு நீ செல்வாய் என்று கேலி செய்திருக்கிறோம், ஏனென்றால் நேரம் மிக விரைவாக முன்னே செல்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய தருணத்தையும் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறாய் என்பதையும், உன் தாயாக கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கும் பெரிய பொறுப்பில் அடிக்கடி நான் மூழ்கியிருப்பதையும் கண்டு  வியப்படைகிறேன்! அவர்கள் சொல்வது போல், அம்மாவாக இது எனக்கு மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் வேலை. நீ ஒரு வயதை நெருங்குவதில்  மகிழ்ச்சி, என் அன்பே, என் குழந்தை நெய்ல்" என காஜல் அகர்வால் கூறியுள்ளார். குழந்தையின் முகம் தெரியும் படி இருக்கும் புதிய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. அமெரிக்கால இத்தனை தியேட்டர்ல ரிலீசா? மாகாணம் வாரியா லிஸ்ட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Shared Her Son Neil Kitchlu Viral Full Face Photo

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal Shared Her Son photo will find this news story useful.