www.garudabazaar.com

"பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" - காஜல் அகர்வால் வெளியிட்ட வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் அடுத்து வரவிருக்கும் தனது  புதிய படத்தின் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

Also Read | "இது தான் எனக்கு விருப்பமான உடை" - சன்னி லியோன் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்புக்கு பிறகும் படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது கோஸ்டி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில்  காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும்  ‘கோஸ்டி’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.  இந்த படம் விரைவில் திரையரங்குகளில்  வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். "பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" என தலைப்பிட்டு தனது புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

 

Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Shared Ghosty Movie Stills

People looking for online information on Ghosty Movie, Kajal Aggarwal will find this news story useful.