www.garudabazaar.com

காஜல் அகர்வால் குழந்தையுடன் விளையாடும் செல்ல நாய்க்குட்டி.. செம்ம CUTE போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது குழந்தை மற்றும் தாம் வளர்க்கும் செல்ல நாய் குட்டியுடன் விளையாடும் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Latest Photo With Her Son Neil Kitchlu

Also Read | 'துணிவு' படத்தின் பாடல் படப்பிடிப்பு.. அஜித்துடன் இருக்கும் Photo-வை பகிர்ந்த பிரபல நடிகர்!

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

 Kajal Aggarwal Latest Photo With Her Son Neil Kitchlu

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

 Kajal Aggarwal Latest Photo With Her Son Neil Kitchlu

குழந்தை பிறந்து ஆறு மாதம் கடந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன், குழந்தை நெய்ல் விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய கவனச்சிதறல்களாக குழந்தையையும் நாய் குட்டியையும் காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாயுடன் விளையாடி குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Also Read | 'தங்கலான்' கெட்டப்பில் சீயான் விக்ரம் போட்டோ ஷூட்.. ரசிகர்களை கவரும் மெர்சலான ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Latest Photo With Her Son Neil Kitchlu

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal Latest Photo, Kajal Aggarwal with Her Son Photo will find this news story useful.