ராஜ ராஜ சோழன் காலத்து ஸ்டைலா? மணிகண்டாவுக்கு உணர்த்த கமல் அரங்கேற்றிய Viral நாடகம்.! bigg boss 6
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.
![Kamal suspense to Manikanda on janany elimination bigg boss 6 Kamal suspense to Manikanda on janany elimination bigg boss 6](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kamal-suspense-to-manikanda-on-janany-elimination-bigg-boss-6-photos-pictures-stills.jpg)
இதில் பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வார சொர்க்கவாசிகள் Vsநரகவாசிகள் டாஸ்க் இன்னும் சூடுபிடித்தது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர். இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடைசிவாரத்தில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த எலிமினேஷனுக்கு முன்பாக, நாமினேட் ஆனவர்களை ஒன்றாக அமரசொன்ன கமல் எலிமினேட் ஆகி யார் போவாங்கன்னு நெனக்கறீங்க? என கேட்க, நாமினேஷன் லிஸ்டில் இருந்த மணி, ஜனனி, ஏடிகே ஆகிய மூவரும் தத்தம் பெயரை குறிப்பிட, இதனிடையே தான் தான் செல்லபோவதாகவும், மக்கள் சப்போர்ட் தனக்கு இல்லையென்றும் கருதிய மணிகண்டாவுக்கு முன் ஒரு குட்டி நாடகத்தை அரங்கேற்றினார் கமல். அதன்படி, சீட்டு குலுக்கிப் போட்டு எவிக்ஷனை தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்ன கமல், ராஜராஜ சோழன் காலத்து முறையாக குடவோலை முறை இருக்கு, மக்களுக்கும் அதுதான் பிடிச்சிருக்காம் என்று ஜாலியாக கூறி, 3 சீட்டுகளை குலுக்கி போட்டு, ஏடிகேவை எடுக்க சொல்ல, அதில் ‘மணிகண்டா’ என்று இருந்தது. இதனால் மணிகண்டா அதிர, அவருக்கு கொஞ்சம் சஸ்பென்ஸ் கொடுத்து பிரேக் விட்டார் கமல்.
அதற்கிடையில்தான் வெளியே போவதாக அனத்திய மணிகண்டாவை, மற்றவர்கள் ஆற்றுப்படுத்த, மீண்டும் பிரேக் முடிந்து வந்த கமல் “அதிர்ஷ்டத்தின் மூலமாக ஒருத்தரை தேர்ந்தெடுப்பது தப்பு. அது சரியான முறையும் அல்ல. நியாயமாக விவாதித்து முடிவை எட்ட வேண்டும். இந்த உண்மையை மணிகண்டாவுக்கு மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக இந்த நாடகத்தை நிகழ்த்தினோம்’ என்று சஸ்பென்ஸ் உடைத்தார். அதாவது மணிகண்டன் Save ஆவதாக அறிவித்த கமல், ஜனனி எலிமினேட் ஆவதை அடுத்து அறிவித்தார்.