777 Charlie Trailer

"அப்பவே கமல் படத்துல கிராஸ் ஓவரா.?".. இது பாரதிராஜாவின் மல்டிவெர்ஸ்.. இதான் இப்போ செம Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்,த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

bharathirajas cross over genre lokesh vikram multiverse kamal

Also Read | ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஜி வி பிரகாஷ்… பிறந்தநாளில் மாஸாக வெளியான ’இடிமுழக்கம்’ first look

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படத்தில், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான கைதி மற்றும் நடிகர் கமல்ஹாசனின் முந்தைய படமான விக்ரம் உள்ளிட்ட படங்களில் இருந்த சில விஷயங்கள் பிரதிபலிப்பதை காண முடிந்தது. இதை மல்டிவெர்ஸ் என்கிற கான்செப்டில் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருப்பதாகவும் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் சிலர் இதை கிராஸ் ஓவர் ஜானர் என்றும் குறிப்பிடுகின்றனர். வசூல் ரீதியாகவும் விக்ரம் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த வகையான திரைக்கதை அமைப்பு குறித்து பலரும் தினந்தோறும் சிலாகித்து இணையதளங்களில் எழுதி வருவதை காணமுடிகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. திரையரங்குகளில் இந்த திரைப்படம் பெற்றுவரும் வரவேற்பைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு, நடிகர் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக அளித்தார். இதேபோல் இந்த படத்தில் ரோலக்ஸ் என்கிற முக்கிய கதாப்பாத்திரத்தில் சூர்யா இடம்பெறுகிறார். அவருக்கு ரோலக்ஸ் வாட்சை கமல்ஹாசன் பரிசாக அளித்திருந்தார். படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு பைக்கையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார்.

bharathirajas cross over genre lokesh vikram multiverse kamal

இந்த நிலையில் கமல்ஹாசனின் பழைய spin-off திரைப்படம் பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதன்படி லோகேஷ் கனகராஜின் மல்டிவெஸ் அல்லது க்ராஸ் ஓவர் என்கிற இந்த வகைமை திரைப்படம் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்திருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 1978 ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் (சப்பானி), ரஜினி(பரட்டை), ஸ்ரீதேவி (மயில்) மூவரும்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

இதனைத் தொடர்ந்து ஆர்.செல்வராஜின் கதையில் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்துடன் 16 வயதினிலே திரைப்படத்தின் சில விஷயங்கள் கிராஸ் ஓவர் ஆகி இருப்பதை காணமுடிகிறது. இதுபற்றிதான் இப்போது ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். 16 வயதினிலே கிளைமாக்சில் பரட்டையிடமிருந்து மயிலை காப்பாற்றுவதற்காக பரட்டையை கொன்றுவிட்டு சப்பானி ஜெயிலுக்கு சென்று விடுவார். அதன்பிறகு சப்பானி சிறையிலிருந்து மீண்டும் திரும்பி வந்தாரா.? சப்பானிக்கும் மயிலுக்கும் திருமணம் நடந்ததா.? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு, ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் பதில் இருக்கிறது.

bharathirajas cross over genre lokesh vikram multiverse kamal

ஆம், சுதாகர், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கும் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் ஒரு திருமண காட்சியில் பலரும் வந்து மொய் பணம் வைத்து விட்டுச் செல்வார்கள். யாரெல்லாம் மொய்ப்பணம் வைக்கிறார்கள் என்று மைக்கில் அறிவிக்கப்படும். அப்போது, காட்சிகளில் சுதாகர் எதார்த்தமாக சைக்கிளில் வந்து நண்பர்களுடன் பேசுவது போல் இருந்தாலும், ஓவர்லாப்பில், “பெட்டிக்கடை மயில் புருஷன் சப்பானி அஞ்சு ரூவ” என்று ஒரு அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்கும்.

அதாவது சப்பானி சிறையிலிருந்து மீண்டு வந்து மயிலை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்கள் இருவரும் கணவன் மனைவி.‌ பத்தாவது படித்த மயிலின் டீச்சர் கனவு நிறைவேறாததாலும், மயிலின் தாயார் குருவம்மா மறைந்துவிட்டதாலும், மயிலுக்காக சப்பானிய சிறை சென்றதாலும் மயிலின் வாழ்க்கை அடியோடி மாறியது. 

இதனால் தாய் குருவம்மா பார்த்துவந்த பெட்டி கடையை, தான் எடுத்து நடத்தத் தொடங்குகிறாள் மயில். அதன்பின் சிறையிலிருந்து மீண்டு வந்த சப்பானியை திருமணம் செய்து கொள்கிறாள். சப்பானி சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பதற்கு 16 வயதினிலே படத்தில் மயில் கற்றுக் கொடுப்பார். அதன் விளைவு இப்போது ஒரு திருமண வீட்டில் ஐந்து ரூபாய் மொய் வைக்கும் அளவுக்கு கௌரவத்துடன் வாழ தொடங்கியுள்ளார் சப்பானி.. இப்படி பல விஷயங்கள் பிரதிபலிக்கும் படி, இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் 16 வயதினிலே திரைப்படத்தில் ரயில் வருவதுடன் திரைப் படம் முடிவடையும். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அந்த ரயில் வருவதுடன் திரைப்படம் தொடங்கும் எப்படி பல ஒற்றுமைகளையும் காணமுடியும்.

இன்னும் சொல்லப்போனால் மேற்சொன்ன திருமண காட்சியில் ராதிகா, அந்த திருமண வீட்டுக்கு உள்ளே வரும்போது ஒலிபெருக்கியில், “செவ்வந்திப் பூ எடுத்த சின்னக்கா” என்று 16 வயதினிலே பாடல் இடம்பெறும். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் பாரதிராஜாவை, “பலே இயக்குனர்ப்பா இவரு.. அப்பவே கிராஸ் ஓவர் ஜானரில் பின்னி இருக்கிறார்” என்று சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

bharathirajas cross over genre lokesh vikram multiverse kamal

இதனிடையே சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு விக்ரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது “டில்லி ரோலக்ஸை சந்திப்பது போல உங்கள் அடுத்த படங்களில் காட்சிகள் இருக்குமா” என்று கேட்கப்பட்ட போது “கண்டிப்பாக இருக்கும். இந்த யூனிவர்ஸ உருவாக்குனதே அதுக்குதான். அடுத்த கட்டங்களில் இந்த கதாபாத்திரங்களை சந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனக் கூறியுள்ளார்.

Also Read | “டில்லி meets ரோலக்ஸ்?... இந்த universe-அ உருவாக்குனதே..” லோகேஷ் சொன்ன exciting தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

bharathirajas cross over genre lokesh vikram multiverse kamal

People looking for online information on 16 Vayathinile, Bharathirajaa, Kamalhassan, Kizhakke Pogum Rayil, Lokesh Kanagaraj, Vikram Movie, Vikram Multiverse will find this news story useful.