777 Charlie Trailer

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஜி வி பிரகாஷ்… பிறந்தநாளில் மாஸாக வெளியான ’இடிமுழக்கம்’ first look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி வி பிரகாஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

G V Prakash Idimuzhakkam firstlook released

Also Read | "நான் நடிச்ச தெலுங்கு படம் ரெண்டர வருஷம் ஓடுச்சு…” ‘Vikram Hitlist’ வெற்றி விழாவில் கமல் speech

சீனுராமசாமி – ஜி வி பிரகாஷ் கூட்டணி…

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், பிக்பாஸ் முகேன் நாயகனாக நடித்த “வேலன்” திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. NR.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

G V Prakash Idimuzhakkam firstlook released

ஆக்ஷன் த்ரில்லர்…

வழக்கமாக மென்மையாக கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி முதல் முறையாக இடிமுழக்கம் படத்தில் ஆக்ஷன் களத்துக்கு மாறியுள்ளார். படம் பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளர் முபாரக்  “இயக்குநர் சீனு ராமசாமி அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படம் ஆரம்ப நொடியிலிருந்து இறுதிவரை, எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு பரபரபான திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் படைப்பாக இருக்கும்.” எனக் கூறியிருந்தார்.

படப்பிடிப்பு நிறைவு…

இந்த படப்பிடிப்பு தொடங்கி குறுகிய நாட்களில்  ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சீனுராமசாமி. இதையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. அதற்குப் பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G V Prakash Idimuzhakkam firstlook released

பிறந்தநாளில் சர்ப்ரைஸ் அப்டேட்…

இந்நிலையில் இன்று ஜி வி பிரகாஷின் பிறந்தநாளை முன்னிட்டு இடிமுழக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிராமத்து இளைஞராக ஜி வி பிரகாஷ் லுங்கி சட்டையோடு கையில் கத்தியோடு காணப்படுகிறார். இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Also Read | “டில்லி meets ரோலக்ஸ்?... இந்த universe-அ உருவாக்குனதே..” லோகேஷ் சொன்ன exciting தகவல்

G V Prakash Idimuzhakkam firstlook released

People looking for online information on G V Prakash, Idimuzhakkam firstlook will find this news story useful.