777 Charlie Trailer

நொறுங்கி போன ராஜூ.. அப்போ பார்த்து அமீர் & பாவனி செஞ்ச சம்பவம்.. BB Jodigal 2 செம Fun-ப்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து பாகங்களாக ஒளிபரப்பாகி நிறைவடைந்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த ஐந்து சீசன்களுமே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Amir heart ballon to Pavani infront of Raju BB Jodigal 2

Also Read | “பாபா ரஜினி ஸ்டைலில் பலூனை வரவழைச்ச Bigg Boss ராஜூ”.. அதெப்படி வாத்தியாரே.? BB Jodigal

இது நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அந்த சீசன் தொடங்கிய முதலிலிருந்தே பார்வையாளரிடம் அதிகரித்திருந்தது. அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியான கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில், ராஜூ ஜெயமோகன் வெற்றி பெறுவதாக நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தோன்றிய ராஜூ ஜெயமோகன், முன்னதாக இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இதேபோல் விஜய் டிவியில் ஏவி ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், சில சீரியல்களில் நடிகராகவும் வலம் வந்தார். பின்னர் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அந்த நிகழ்ச்சியின் வின்னராக உருவெடுத்தார். அதன் பின்னர் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அன்பும் ஆதரவும் அதிகரித்தது.

Amir heart ballon to Pavani infront of Raju BB Jodigal 2

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ராஜூ ஜெயமோகன் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் அடங்கிய புதிய ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த BB ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் இணையுடன் நடனம் ஆடி கலக்கி வருகின்றனர்.

இதில் ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா இருவரும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்கின்றனர். நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நடிகர் ராஜூ ஜெயமோகன், பாபா பட ரஜினி கெட்டப்பில் தோன்றி அவர் போலவே தனக்குள்ளேயே மந்திரம் சொல்லி பலூன் ஒன்றை தன்னிடம் வரவழைத்தும், தன்னிடம் இருந்து போகவைத்தும் மேஜிக் பண்ணி அசத்துகிறார்.

Amir heart ballon to Pavani infront of Raju BB Jodigal 2

இது எப்படி நடந்தது என அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போக, அப்போது பேசிய ராஜூ, “ரஜினியின் பாபா கெட்டப்பை போட்டு, அந்த மந்திரத்தை சொன்னாலே, பலூன் மட்டுமல்ல, எதுவேணாலும் வரும்” என பஞ்ச் பேசி பறக்க விடுகிறார். பின்னர் அந்த பலூனை ரம்யா கிருஷ்ணனுக்கு சென்று வழங்க அது உடைந்ததும் மனம் உடைந்து போகிறார் (காமெடியாக).

Amir heart ballon to Pavani infront of Raju BB Jodigal 2

பின்னர் விடுகதையா.. இந்த வாழ்க்கை பாட்டுக்கு ஃபீல் பண்ணி சென்று அமர, அப்போது ஹார்ட்டின் பலூன் ஒன்றை அமீர் எடுத்து ராஜூ கையில் கொடுப்பார் என்று பார்த்தால், அவரும் பாவனி கையில் கொடுக்க, ராஜூ பாத்தோஸ் மோடுக்கு செல்கிறார். இப்படி இந்நிகழ்ச்சியில் ராஜூவின் குறும்புகளும் அட்ராசிட்டியும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்கிறது.

Also Read | "அது மூக்குத்தி முருகன் இல்ல.. மூக்குத்தி அம்மன்".. அறிமுகம் இல்லாத வீட்டு விசேஷம்.. RJ பாலாஜி Surpise

தொடர்புடைய இணைப்புகள்

Amir heart ballon to Pavani infront of Raju BB Jodigal 2

People looking for online information on Amir pavani, Amir Pavani dance, Bb jodigal 2, Bigg boss, Raju jeyamohan, Vijay Television will find this news story useful.