777 Charlie Trailer

“பாபா ரஜினி ஸ்டைலில் பலூனை வரவழைச்ச Bigg Boss ராஜூ”.. அதெப்படி வாத்தியாரே.? BB Jodigal

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் டைட்டில் வின்னரானவர் ராஜூ ஜெயமோகன். இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக தொடங்கிய பயணம், விஜய் டிவியில் ஏவி ஸ்கிரிப்ட், சீரியல்களில் நடிப்பு என படிப்படியாக வளர்ச்சியினை கண்ட ராஜூ தற்போது நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமையுடன் கலக்கி வருகிறார்.

Raju brings baloon baba rajini style BB Jodigal 2

Also Read | "அது மூக்குத்தி முருகன் இல்ல.. மூக்குத்தி அம்மன்".. அறிமுகம் இல்லாத வீட்டு விசேஷம்.. RJ பாலாஜி Surpise

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும்  நிகழ்ச்சியின் 2வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நடனம் ஆடி கலக்கி வருகின்றனர்.

தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பாவனி, அமீர், ஆர்த்தி, நாடியா சாங், சுஜா வருணி என பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில எபிசோடுகளில் கொரோனா காரணமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அந்த எபிசோடுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்தார்.

Raju brings baloon baba rajini style BB Jodigal 2

இதேபோல் முந்தைய சீசன் BB ஜோடிகள் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில்  தனக்கே உரிய கறார், கண்டிப்பு, ஆளுமைகளுடனும் குறைவில்லாத கலகலப்புடனும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பங்குபெற்றிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசனில் ராஜூ செய்யும் சேட்டைகள் அடங்கிய ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராஜூ முதலில் பாபா ரஜினி ஸ்டைலில் பேசி பலூனை தன்னிடம் வரவழைக்கிறார். இதை பார்த்ததும் ராஜூ எப்படி பாபா மந்திரம் போட்டு தன்னிடம் பலூனை வரவழைத்தார் என தெரியாமல் அரங்கமே ஆச்சரியப்பட்டு போனது.

Raju brings baloon baba rajini style BB Jodigal 2

ரஜினியின் பாபா கெட்டப்பை போட்டு, அந்த மந்திரத்தை சொன்னாலே, பலூன் மட்டுமல்ல, எதுவேணாலும் வரும் என ரஜினி ஸ்டைலில் ராஜூ பஞ்ச் டயலாக் பேச, ரம்யா கிருஷ்ணனோ, “இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியல” என ஆச்சரியமாக கேட்டார். பாபா படத்தின் ஒரு காட்சியில் ரஜினி மந்திரம் சொல்லி, நீலாம்பரி எனும் பிரபல கேரக்டரில் வரும் ரம்யா கிருஷ்ணனை தன் பக்கம் வரவழைத்து பரிசோதித்து பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raju brings baloon baba rajini style BB Jodigal 2

Also Read | "நான் சினிமாவுக்கு வந்ததே இப்படி தான்".. சிவகுமார் குடும்பம் பற்றி சத்யராஜ் நெகிழ்ச்சி..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raju brings baloon baba rajini style BB Jodigal 2

People looking for online information on Bb jodigal 2, Bigg boss, Bigg Boss Raju, Raju jeyamohan, Vijay Television will find this news story useful.