www.garudabazaar.com
www.garudabazaar.com

"பொசுக்குனு இப்படி கேட்டுட்டீங்களே? இனி எப்படி பேய் படத்த ரசிக்குறது?".. வெங்கட் பிரபு ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'மாநாடு'.  இதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிக்காஸ்ட் (Live Telecast) எனும் வெப்சீரிஸ் தற்போது வெளியாகியுள்ளது.

Kajal agarwal Live Telecast venkat prabhuGlimpse லைவ் டெலிகாஸ்ட்

வைபவ், காஜல் அகர்வால், யோகி பாபு, கயல் ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லைவ் டெலிக்காஸ்ட் (Live Telecast) ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வெப் சீரிஸ் பேய்க் கதையை மையமாக வைத்து பயணிக்கிறது. அதன் ஒரு பிரத்தியேகக் காட்சியை தமது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர்ட் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

Kajal agarwal Live Telecast venkat prabhuGlimpse லைவ் டெலிகாஸ்ட்

அந்த காட்சியில் கோபிநாத் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்துக்கிறார். அதில் பேயை நம்புபவர்கள், பேயை நம்பாதவர்கள் என்று இரண்டு கூட்டத்தினர் விவாதம் செய்துகொள்கின்றனர். அப்போது பேயை நம்பாத ஒருவர்,  “நல்லவர்கள் இறந்து பேயானால் பழிவாங்குகிறார்கள். அவர்களால் பழிவாங்கப்படும் கெட்டவர்கள் இறந்து பேயாகி ஏன் பழிவாங்குவதில்லை?” என்று கேட்கிறார். அதற்கு கோபிநாத்தோ, “தமிழ் சினிமாவின் பேய் ஃபார்முலாவையே ஒடைச்சுட்டீங்களே? இனி எப்படி நாங்க பேய் படத்த ரசிச்சு பாப்போம்” என்கிறார்.

இதைப் பகிர்ந்த வெங்கட் பிரபு,  “காஞ்சுரிங், அனபெல்லா இதுலலாம் பேய்க்கு பெரிய பிளாஷ்பேக் வைக்கலனாலும் ஒத்துக்கிறீங்களே? அனைத்து ரிவ்யூவவர்களே இந்த கேள்விக்கு என்ன பதில்? ரிவன்ஜ் இல்லாத பிளாஷ்பேக்கை எதுக்கு ஒத்துக்க மாட்றீங்க?” என்று கேட்டுள்ளார்.

Kajal agarwal Live Telecast venkat prabhuGlimpse லைவ் டெலிகாஸ்ட்

அவரது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. அந்த காட்சியையும் பலர் பாராட்டி வருகின்றனர். 

ALSO READ: 'அது தல தானே?'.. சர்ப்ரைசில் ஆழ்ந்த பொதுமக்கள்.. அஜித்தை இப்படி பாத்துருக்கீங்களா? #ViralVideo

தொடர்புடைய இணைப்புகள்

Kajal agarwal Live Telecast venkat prabhuGlimpse லைவ் டெலிகாஸ்ட்

People looking for online information on Anandhi, Gopinath, Kajal Agarwal, Kajal Aggarwal, Live Telecast, Live Telecast Tamil, Vaibhav, Venkat Prabhu will find this news story useful.