‘உனக்கென்ன வேணும் சொல்லு...’ - சூர்யாவுக்காக மகளின் குரலை அறிமுகம் செய்த ஹாரிஸ்- Emotional Moment
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 21, 2019 08:36 PM
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
![Kaappaan Audio Launch Live - Harris Jayaraj daughter Nikita Harris makes singing debut in Suriya's Kaappaan Kaappaan Audio Launch Live - Harris Jayaraj daughter Nikita Harris makes singing debut in Suriya's Kaappaan](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kaappaan-audio-launch-live-harris-jayaraj-daughter-nikita-harris-makes-singing-debut-in-suriyas-kaappaan-photos-pictures-stills.jpg)
‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்விழாவின் தொடக்கத்தில் ‘காப்பான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மெலோடி பாடல் மேடையில் அரங்கேறியது.
இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிக்கிதா ஹாரிஸ் பாடியுள்ளார். இதன் மூலம் நிகிதா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். நிக்கிதாவின் பெர்ஃபார்மன்ஸை பார்த்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மகளின் அறிமுகம் குறித்து பேசிய ஹாரிஸ், ஒரு அப்பாவாக பெருமைப்படுவதாக தெரிவித்தார். மேலும், தனது மகளுக்கு தான் இசையமைத்த பாடல்களில் ஒரு பாடலையும் டெடிகேட் செய்தார். கவுதம் மேனன் இயக்கிய அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு..’ பாடலை பாடி மகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் லைவ் அப்டேட்ஸ்க்கு இணைந்திருங்கள் Behindwoods உடன்..!
‘உனக்கென்ன வேணும் சொல்லு...’ - சூர்யாவுக்காக மகளின் குரலை அறிமுகம் செய்த ஹாரிஸ்- EMOTIONAL MOMENT வீடியோ