சூர்யாவுக்காக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்! - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 02:41 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'காப்பான்'. இந்த படத்தை லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்த சிரிக்கி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் மற்ற பாடல்கள் ஜூலை 21 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கவிருக்கின்றனர். இதனை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.