தனுஷ், விஷால் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 17, 2019 07:20 PM
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்ஷ்ன் எண்டர்டெய்னர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். தற்போது மற்றொரு ஹீரோயினாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆ.ரவிந்திரனின் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் துருக்கி, அஸர்பைஜான் உள்ளிட்ட நாடுகளிலும், சென்னை பின்னி மில்லிலும் நடைபெற்றது. அதையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் இன்று டேராடூன் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி வரை நடைபெறும் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த படம் மட்டுமல்லாது நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் லண்டனில் தொடங்கவிருக்கிறது.
இதனிடையே மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.