'ஜாக்பாட்' படத்துக்கு பிறகு சூர்யாவின் தயாரிப்பில் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஜேஜே ஃபெட்ரிக்கிற்கு அவரது மனைவியும் பிரபல ஸ்டைலிஷ்ட்டுமான ஜாய் கிரிஸில்டா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கணவர், என்னுடைய காதல், உண்மையான நண்பர் ஜேஜே ஃபெட்ரிக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உனக்கு தெரிந்ததை விட உன்னை காதலிக்கிறேன். சறந்த கணவராகவும், சிறந்த தகப்பனாகவும் இருப்பதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
'பொன்மகள் வந்தாள்' படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் தியாகராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
My husband, my love, my truest friend, my forever home 😘❤️ @fredrickjj Happy birthday to the one behind my biggest smile and brightest days ❤️ I love u more than u know 😘 and thank u for being a such a great husband & a great daddy ❤️ #happybirthdayhubby #loveofmylife pic.twitter.com/g2xtOWpPJG
— Joy Crizildaa (@joy_stylist) January 28, 2020