சூர்யா வழங்கிய 'சில்லுக்கருப்பட்டி' இயக்குநரின் அடுத்த படத்தில் 'விக்ரம் வேதா' காம்போ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படம்  கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. காதலை அடிப்படையாகக் கொண்ட நான்கு கதைகளின் தொகுப்பாக வெளியான இந்த' படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Suriya's Sillu Karuppatti Director Halitha Shameem next Movie Aelay, Vikram Vedha Pushkar and Gayathri Producer

டிவைன் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன்,  பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படமான ஏலே படம் குறித்து அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், என் படம் பற்றி கேட்டவர்களுக்கு என்னுடைய அடுத்த படமான ஏலே படத்தின் போஸ்டர் இதோ. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ரெடியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஏலே படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, கேபர் வாசுகி இசையமைத்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். 'விக்ரம் வேதா' பட இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இந்த படத்தின் கிரியேட்டர் புரொடியஷர்களாக பணிபுரிந்துள்ளனர்.

 

Entertainment sub editor