‘காக்க காக்க படத்துல சூர்யாவ காதலிச்சேன், ஆனா பார்ட் 2-ல...’ - ஜோதிகா ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகையும், சூர்யாவின் காதல் மனைவியுமான ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Jyothika reacts if she will pair-up with Suriya for Kaakha Kaakha 2

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' திரைப்படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், புரொமோஷன் பணிகளில் ஜோதிகா பிசியாக உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ஜோதிகா, மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது குறித்து பேசினார். ‘காக்க காக்க 2’ திரைப்படம்ம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, அந்த படம் வந்தால் நான் பேய் மாதிரி வந்து சூர்யா ரொமான்ஸ் செய்யும் வேற ஹீரோயினை பயமுறுத்தணும். இருவரும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறோம். அதற்கு ஏற்ற கதை அமையவில்லை. கார்த்தியுடன் இணைந்து நடிப்பேன் என்று யோசிக்கவே இல்லை’ என்றார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘என்ஜிகே’ பற்றி பேசுகையில், பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு பெர்ஃபார்மன்ஸ் வகையில் என்ஜிகே சிறப்பாக இருந்தது என்றார்.

‘காக்க காக்க படத்துல சூர்யாவ காதலிச்சேன், ஆனா பார்ட் 2-ல...’ - ஜோதிகா ஓபன் டாக் வீடியோ