'செக்கச்சிவந்த வானம் படத்தின் மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் 'ராட்சஷி'. இந்த படம் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வெளியாக விருக்கிறது.
டிரீம் வாரியர்ஸ் சார்பில் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தை கௌதம் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து Behindwoods Tvக்கு ஜோதிகா பிரத்யேகமாக பேட்டியளித்தார். தோனிக்கு சூர்யா என்றால் மிகவும் பிடிக்கும் என்று பல நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார். உங்கள் குழந்தைகளுக்கு தோனி என்றால் பிடிக்கும். தோனியுடனான சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜோதிகா, தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்துக்காக சத்யம் சினிமாஸிற்கு வந்திருந்தாங்க. நாங்கள் போய் சந்தித்தோம். போர்டஸ்மேன் ஆர் ரியல் சூப்பர் ஸ்டார். எனக்கு தோனி என்றால் மிகவும் பிடிக்கும். என்று தெரிவித்தார்.
''அவங்க தான் ரியல் சூப்பர் ஸ்டார் - தோனினா எனக்கு ரொம்ப பிடிக்கும்'' - ஜோதிகா புகழாராம் வீடியோ