'ஒன்றா ரெண்டா ஆசைகள்..'- சூர்யா-ஜோதிகாவின் ரொமான்ஸை Follow பண்ணும் சாயிஷா ஆர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா, ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

Sayyeshaa singing Ondra Renda Aasaigal from Suriya Jyothika's Kakka Kakka

ஹைதராபாத்தில் கடந்த மார்ச்.10ம் தேதி ஆர்யா-சாயிஷா திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. ஆர்யா-சாயிஷா இணைந்து நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, மோகன்லால், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெடி’ திரைப்படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.

இதனிடையே, ஷூட்டிங்கிற்கு நடுவே நடிகை சாயிஷா தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹிட் காதல் பாடல் ஒன்றை தமிழில் பாடியுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கோலிவுட்டின் ஐடில் ஜோடியாக திகழும் சூர்யா-ஜோதிகா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ஒன்றா ரெண்டா ஆசைகள்..'- சூர்யா-ஜோதிகாவின் ரொமான்ஸை FOLLOW பண்ணும் சாயிஷா ஆர்யா! வீடியோ