க்பாஸ் வீட்டில் மதுமிதாவும் மீராவும் படும் பாட்டை பார்த்து பாவமாக உள்ளது என சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா, மதுமிதாவையும் மீராவையும் கார்னர் செய்து அவர்களிடம் சண்டை போடுவதையே முக்கிய வேலையாக வைத்துள்ளார். மேலும் மற்ற ஹவுஸ்மேட்ஸும் அவர்களிடம் பேசாத வகையில் நாள்தோறும் பிரச்சனையை கிரியேட் செய்து வருகிறார்
குறிப்பாக மதுவை எதுவுமே பேச விடாமல் கத்தி கூப்பாடு போட்டு வருகிறார் வனிதா. மீரா மற்றும் பேச வாய திறந்தாலே அவர்களை டாமினேட் செய்து வேறு மாதிரி ட்ராக்கை கொண்டு செல்வதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்.
வனிதாவின் பேச்சும் பேச்சு முறையும் பார்வையாளர்களை எரிச்சலடைய செய்கிறது. அதே நேரத்தில் மதுமிதா மற்றும் மீரா பிக்பாஸ் வீட்டில் எந்த தவறும் செய்யாமால் வனிதா கேங்கால் டார்கெட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் வாய்திறக்கவே அச்சப்படுகின்றனர் மதுமிதாவும் மீராவும். வனிதா, தான் மட்டும்தான் 100 சதவீதம் சரி, தான் சொல்வது மட்டும்தான் சரி என்ற ரீதியிலேயே மற்றவார்களை பேசவிடாமல் டாமினேட் செய்து வருகிறார்.
மேலும் மதுமிதாவுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லை என்பதையும் மறைமுகமாக கூறி டீஸ் செய்து வருகிறார். மதுமிதா தெல்ல தெளிவாக தமிழில் பேசும் போது, இவ என்ன பேசுறா சுத்த வேஸ்ட் என்பதை போல் ஆங்கிலத்தில் அவரது கேங்குடன் பேசி வெறுப்பேற்றி வருகிறார்.
வனிதாவின் செயல்பாடுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு நன்றாகவே புரியும். இந்நிலையில் வனிதா குறித்தும் மதுமிதா மற்றும் மீரா குறித்தும் நடிககை காஜல் ட்வீட் செய்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பாவம்யா அந்த மது அன்ட் மீரா...எல்லாத்துக்கும் கதறாங்க.. வனிதா யாரையும் பேசவே விட மாட்டாங்க போல.. என கூறியுள்ளார். காஜல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். இவர் கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Paavam ya anda Madhu & Mira😕
Yellathukum katharanga... Vanitha yaaraiyum pesavay vidamatanga pola 😡
— Kaajal Pasupathi (@kaajalActress) July 2, 2019