"சும்மாவே சினிமாகாரனுக்கு பொண்ணு தரமாட்டாங்க..!" - சதீஷ் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய ஜீவா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 20, 2019 06:29 PM
காமெடி நடிகர் சதீஷின் திருமணத்திற்கு பிரபல நடிகர் ஜீவா காமெடியாக வாழ்த்துக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கிரேசி மோகனின் நாடகக் குழுவில் பணியாற்றிய நடிகர் சதீஷ் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சதீஷ் குதர்க்கமாகவும், கேலியாகவும் கருத்து கூறுவதிலும் பிரபலமானார். சிங்கிள் ஸ்டேட்டஸில் இருந்து வந்த சதீஷ் தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.
சமீபத்தில் சதீஷுக்கு எளிமையாக நடந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால் சினிமா பிரபலங்களுக்கும், சில முக்கிய தலைவர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை நடிகர் சதீஷ் வழங்கி வருகிறார்.
தற்போது நடிகர் ஜீவாவுக்கு திருமண அழைப்பிதழை வழங்க, ஜீவா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சதீஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த வீடியோவில், ‘சும்மாவே சினிமாகாரனுக்கு பொண்ணு தரமாட்டங்க.. அந்த விதத்துல நீங்க லக்கி ப்ரோ.. விரைவில் திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் உங்களுக்கும், சிந்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.