திருமூர்த்தியை பிரபல ஹீரோ படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தும் டி.இமான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் விஸ்வாசம். தந்தை மகள் பாசத்தை பேசிய இந்த படத்தில் இடம் பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் மிகவும்  பிரபலம்.

D Imman Introduces Thirumoorthy as Play Back Singer in Jiiva's Seeru

இந்த பாடலை பார்வை மற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்தி பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இமான் திருமூர்த்திக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்பு அளிக்கவிருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் டி.இமான் ட்விட்டரில், தம்பி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்துகிறேன். என்னுடைய அடுத்த படமான ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'சீறு' படத்தில் அவர் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.