சீயான் விக்ரமின் ‘விக்ரம் 58’ படத்தில் இணைந்த பிரபல டான்ஸர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

Choreographer Sathish joined the sets of Ajay Gnanamuthu's 'Vikram 58'

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் கேரளாவில் தொடங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ஒரு பாடல் காட்சி கேரளாவில் உள்ள ஆழப்புழா நகரில் பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இதனிடையே, பிரபல துணை நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் இப்படத்தில் இணைந்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த கொரியோகிராஃபர் என இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சதீஷுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.