‘பைத்தியக்கார வேலை இது..’- சாண்டிக்கு Prank டாஸ்க் கொடுத்த பிக் பாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 3 Promo is out, Bigg Boss gave Prank task to Sandy

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நாமினேட் செய்யப்பட்ட 7 பேரில் இருந்து ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் சாண்டிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதன்படி, மதுமிதா, மீரா என போட்டியாளர்களை வெளியே அனுப்ப மற்ற ஹவுஸ்மேட்ஸ் உதவும் வேளையில், சாண்டி கன்ஃபெஷன் ரூமிற்கு அழைக்கப்படுகிறார்.

அங்கு போன பிறகு தான் இது வெறும்  Prank என்பதை பிக் பாஸ் கூறுகிறார். இதனால், கடுப்பான சாண்டி, இது பைத்தியக்கார வேலை. அப்போ எதுக்கு தான் இங்க வந்தோம்? என்ற்கு கேட்க, அவங்க பண்றாங்க.. நாம எடுக்க வேண்டிய முடிவு இது என மற்ற ஹவுஸ்மேட்ஸ் கோபமடைந்த சாண்டிக்கு சமாதானம் கூறுகின்றனர்.

‘பைத்தியக்கார வேலை இது..’- சாண்டிக்கு PRANK டாஸ்க் கொடுத்த பிக் பாஸ் வீடியோ