ஜெயம் ரவி - ஹிப்ஹாப் தமிழாவின் 'கோமாளி' - எப்போ ரிலீஸ் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'அடங்க மறு'. இந்த கார்த்திக் தங்கவேலு இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

Jayam Ravi's Comali will release in Independence day

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவியின் பல்வேறு லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகும் தேதி குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.