''பிரபு தேவா டைரக்ட் பண்ணா எப்படி இருக்கும்?'' - ஜெயம் ரவியின் கோமாளி குறித்து காமெடி பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

Jayam Ravi and Kajal Aggarwal's Comali is out in Behindwoods TV

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவியின் பல்வேறு லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது Behindwoods TVயில் வெளியாகியுள்ளது. அதில், பேசிய யோகி பாபு, இந்த படத்தில் ஜெயம் ரவி காலேஜ் ஸ்டுடன்ட் மாதிரி துருதுருவென நடித்திருக்கிறார். நான் எத்தனையோ இயக்குநர்களோடு பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக இயக்கியிருக்கார். பிரபு தேவா டைரக்ட் பண்ணா எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது'' என்றார். 

''பிரபு தேவா டைரக்ட் பண்ணா எப்படி இருக்கும்?'' - ஜெயம் ரவியின் கோமாளி குறித்து காமெடி பிரபலம் வீடியோ