பிக்பாஸ் சீசன் 2 வில் தனது இயல்பான நடவடிக்கைகளால் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்தவர் பொன்னம்பலம்.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியுள்ளதால், தற்போதுள்ள போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ''சேரன், சரவணன் கடைசி வரை இருப்பாங்க, 4 பேர்ல கன்பார்மா லொஸ்லியா இருப்பா. வனிதா விஜயகுமார் அடிப்பட்டு அடிப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்தவர். வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் மன வருந்தி சொல்றார் என்றால் அவர் வாழ்வில் அதிகம் அனுபவப்பட்டிருக்கிறார்.
சாண்டி கழுவுற மீன்ல நழுவுற மீன்.. நான் ஜாலியா இருக்க வந்தேன். மக்கள் அனுப்புறதும் அனுப்பாததும் அவங்க கையில என்று இருக்கிறார். யாரோட கண்ணும் அவர் மேல படாது'' என்றார்.
''இவரு கழுவுற மீனுல நழுவுற மீனு'' - முன்னாள் BIGG BOSS போட்டியாளர் விமர்சனம் வீடியோ