கொலவெறியில் விஷ்ணு விஷால் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு டீஸர் - டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் ரசிகர்கள் அனுமதி இருந்தால் மட்டுமே வெளியிடுவதாவும் தெரிவித்திருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் அவரிடம் டீஸரை வெளியிடும்படி கேட்டிருந்தனர்.

அதன் படி தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரின் படி இந்த படத்துக்கு 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டீஸரில் துவக்கத்தில் , நீங்கள் இப்பொழுது என்ன செய்கிறீர்களோ அதனைப் பொறுத்தே எதிர்காலம் இருக்கும் என்று மகாத்மா காந்தியின் பொன்மொழிகளோடு துவங்குகிறது.

காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காந்தியத்தை பேசக்கூடிய படமாக இது இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், டீஸரின் துவக்கத்திலேயே காந்தியின் மற்றொரு புகழ்பெற்ற வாசகமான தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதற்கேற்ப மூன்று குரங்குகள் காட்டப்படுகிறது. 

அதன் பின்னணியில் விஷ்ணு விஷால்  வெறித்தனமாக ஒரு கொலை செய்கிறார். பின்னர் சர்வ சாதரணமாக நடந்து வந்து ரத்தம் தெறித்த தனது உடைகளை சலவை செய்கிறார். இது அந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

மோகன்தாஸ் படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்க, விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.

கொலவெறியில் விஷ்ணு விஷால் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு டீஸர் - டைட்டில் என்ன தெரியுமா ? வீடியோ

Entertainment sub editor