இந்த டீசரை எப்படி எடுத்தோம் தெரியுமா.? - பிரபல ஹீரோ சொல்லும் மேக்கிங் சீக்ரட்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தனது மோகன்தாஸ் படத்தின் டீசர் உருவான விஷயத்தை பகிர்ந்துள்ளார். 

டீசர் ரகசியத்தை உடைக்கும் விஷ்ணு விஷால் | vishnu vishal opens about his mohandas teaser making secrets

தமிழ் சினிமாவில் இளம்கதாநாயகனாக வலம் வருபவர் விஷ்ணு விஷால்.வெண்ணிலா கபடி குழு, முண்டாசுபட்டி, ஜீவா உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ராட்சன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. விஷ்ணு விஷால் தற்போது F.I.R என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று விஷ்ணு விஷாலின் அடுத்தப்படமான மோகன்தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த டீசர் உருவான ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்னர், சில பேரை மட்டுமே வைத்து கொண்டு, இந்த டீசரை எங்கள் ஆபிசிலேயே உருவாக்கினோம். குறிப்பாக அரசு சொல்லிய சமூக விலகலை கடைபிடித்து இந்த டீசரை உருவாக்கினோம்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

Entertainment sub editor