டீசர் வரும்.. வந்தா வெடிக்கும் - எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் படக்குழுவின் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜி.எஃப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்து ஒரு மாஸான தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. 

கேஜிஎஃப் டீசர் - படக்குழு செம தகவல் | kgf team clarifies about teaser and trailer release

2018-ஆம் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இத்திரைப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்தார். மேலும் ஶ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் தமிழில் இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்து படக்குழுவிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொட்யூசர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், '' டீசரை இப்போது வெளியிடும் என்னம் இல்லை, படத்தின் ரிலீஸ் அப்போது டீசர் மற்றும் ட்ரெய்லர் வரும், அப்போது பெரிய bang ஆக இருக்கும், அதுவரை காத்திருப்போம்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

 

Entertainment sub editor